search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வீரர்கள்"

    ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இடம்பெற போவது டோனியா, ரெய்னாவா அல்லது ரோகித் சர்மாவா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. #IPL2019 #200sixes #MSDhoni #SureshRaina #RohitSharma
    ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் வருகிற 23-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்களிடம் ஐபிஎல் ஜுரம் தொற்றிக் கொண்டது. இதனால் ஐபிஎல் தொடர் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை நெருங்குவது யார் என்ற போட்டியில் எம்.எஸ். டோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் உள்ளனர்.

    இதுவரை நடந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் டோனி 186 சிக்சர்களும், சுரேஷ் ரெய்னா 185 சிக்சர்களும், ரோகித் சர்மா 184 சிக்சர்களும் அடித்துள்ளனர்.



    இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சிக்சர்கள் அடித்து 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.

    ஐபிஎல் தொடரில் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் 292 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #200sixes #MSDhoni #SureshRaina #RohitSharma
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. #Pakistan #ShahMehmoodQureshi #ICC #wearingmilitarycap
    இஸ்லாமாபாத்:

    ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் சொகுசு காரை மோதச் செய்தான். அதில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினர். 

    இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போட்டியின்போது ராணுவ தொப்பியுடன் களம் இறங்க இந்திய அணி முடிவு செய்தது. அதன்படி வீரர்கள் ராணுவ தொப்பியுடன் பீல்டிங் செய்தனர்.

    இந்நிலையில், ராணுவ தொப்பி அணிந்து இந்திய வீரர்கள் விளையாடியதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மெஹ்மூத் குரேஷி வலியுறுத்தியுள்ளார். 

    இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த குரேஷி கூறுகையில், தன்னுடைய சொந்த தொப்பிக்கு பதிலாக ராணுவ தொப்பியை அணிந்து இந்திய அணி விளையாடியதை உலகமே பார்த்தது. ஐசிசி பார்க்கவில்லையா?. ஐசிசி தானாக முன் வந்து இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #Pakistan #ShahMehmoodQureshi #ICC #wearingmilitarycap
    டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் கலப்பு பிரிவில் இந்திய வீரர்கள் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி தங்கம் வென்று அசத்தியுள்ளது. #ISSFWorldCup #ManuBhaker #SourabhChoudhary
    புதுடெல்லி:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று  வருகிறது.

    இதில், கலப்பு பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. #ISSFWorldCup #ManuBhaker #SourabhChoudhary
    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று புத்தாண்டு விருந்து அளித்தார். #ScottMorrison #NewYearHost #IndianPlayers #AustralianPlayers
    சிட்னி:

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டி 20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 3 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது.



    இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு தனது இல்லத்தில் இன்று புத்தாண்டு விருந்தளித்து அசத்தினார்.

    இந்த விருந்தில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உள்பட அனைத்து வீரர்களும், அணி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    மேலும், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது பாரம்பரிய நீல நிற உடையுடன் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. #ScottMorrison #NewYearHost #IndianPlayers #AustralianPlayers
    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ராகுல் எகிப்து வீரர் மோன்டாசரிடம் தோல்வியை தழுவினர்.
    சென்னை:

    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராகுல் பாய்தா 4-11, 9-11, 9-11 என்ற நேர் செட் கணக்கில் மோன்டாசரிடம் (எகிப்து) வீழ்ந்தார். யாசிர் பாத்டே, வீர் சோட்ரானி ஆகிய இந்திய வீரர்களும் தோல்வியை தழுவினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து வீராங்கனை அலிஸ் கிரீன் 11-13, 11-4, 11-8, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் செங் நகா சிங்கை (ஹாங்காங்) தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் ரோவன் எலராபி (எகிப்து) 11-4, 11-8, 11-2 என்ற நேர் செட்டில் இந்திய வீராங்கனை ஆஷிதாவை பந்தாடினார். இதே போல் ஐஸ்வர்யா, சன்யா வட்ஸ் ஆகியோரும் 2-வது சுற்றை தாண்டவில்லை. இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. 
    உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் ராகுல் பாய்தா, சுவிட்சர்லாந்து வீரர் நில்ஸ் ரோச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    சென்னை:

    இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ராகுல் பாய்தா 11-5, 12-10, 11-8 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்து வீரர் நில்ஸ் ரோச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யாஷ் பத்டே 10-12, 11-7, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீரர் அப்டெல் ரஹ்மாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் அட்வைத் அடிக், உட்கர்ஷ் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினார்கள். 
    ×